27 ஏப்ரல் 2026
மதிப்பிற்குரிய காப்புறுதிதாரரே,
முக்கிய அறிவித்தல்: மோட்டார் காப்புறுதி கட்டுப்பண கொடுப்பனவு தேவைப்பாடுகள் மற்றும் டிஜிட்டல் மோட்டார் காப்புறுதி அட்டை
ஃபெயார்ஃபஸ்ட் இன்சூரன்ஸின் பெறுமதி வாய்ந்த வாடிக்கையாளராக திகழ்கின்றமைக்கு நன்றி தெரிவிக்கிறோம்.
அண்மையில் இலங்கை காப்புறுதி ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவினால் (IRCSL) மேற்கொள்ளப்பட்ட ஒழுங்குபடுத்தல் மாற்றங்களுக்கமைய, 2026 மே 1ஆம் திகதி அல்லது அதற்குப் பின்னர் வழங்கப்படும் மோட்டார் காப்புறுதிகளுக்கு பின்வரும் மெருகேற்றங்கள் பொருந்தும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.
காப்புறுதி ஆரம்பிக்கப்பட்டது முதல் வழங்கப்படும் கட்டணம் செலுத்துவதற்கான சலுகைக் காலம் ஆகக்கூடியது 30 நாட்களுக்கு மட்டுப்படுத்தப்படும். இந்தக் காலப்பகுதிக்கு அப்பால் கட்டணம் செலுத்தப்படாமல் இருக்கும் காப்புறுதிகள், கட்டுப்பண கொடுப்பனவு உத்தரவாத சரத்தின் பிரகாரம் இரத்துச் செய்யப்படும். இந்த 30 நாள் சலுகைக் காலம் தொடர்பான இலங்கை காப்புறுதி ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் வழிகாட்டல் உங்களின் கவனத்திற்காக இணைக்கப்பட்டுள்ளது.
உரிய காலப்பகுதியினுள் கட்டுப்பணங்கள் செலுத்தப்பட வேண்டும் என்பதையும், அதனூடாக உங்களின் காப்புறுதியை தடங்கலின்றி தொடர்ந்து பேணக்கூடியதாக இருக்கும் என்பதையும் தயவுடன் உங்களுக்கு நினைவூட்டுகிறோம்.
டிஜிட்டல் மோட்டார் காப்புறுதி அட்டை
மேலும், இலங்கை காப்புறுதி ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் 2026 ஆம் ஆண்டின் இல 6 அறிவுறுத்தலின் பிரகாரம், 2026 மே மாதம் 1ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில், மோட்டார் காப்புறுதி அட்டைகள் டிஜிட்டல் வடிவில் மாத்திரமே வழங்கப்படும். பிளாஸ்ரிக் கார்ட்கள் வழங்கப்படமாட்டாது.
உங்களுக்கு மேலதிக தெளிவுபடுத்தல்கள் அல்லது உதவிகள் தேவைப்பட்டால் எமது 24/7 நேர ஹொட்லைன் இலக்கமான 0112 428 428 உடன் தொடர்பு கொள்ளுங்கள்.
உங்களின் தொடர்ச்சியான நம்பிக்கை மற்றும் புரிதலுக்கு நாம் உங்களுக்கு நன்றி தெரிவிப்பதுடன், உங்களுக்கு தொடர்ந்தும் சேவைகளை வழங்க எம்மை அர்ப்பணித்துள்ளோம்.
தங்கள் நம்பிக்கைக்குரிய,
ஃபெயார்ஃபஸ்ட் இன்சூரன்ஸ் லிமிடெட்
இணைப்புகள்:
அறிவுறுத்தல் 2026 இன் 5
அறிவுறுத்தல் 2026 இன் 6